மகிந்தவின் உடல்நிலைக்கு என்ன நடந்தது..! பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
தான் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்து விட்டதாகவும் இணையத்தளங்களில் நேற்றிரவு முதல் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தன.
எனினும் சமூகவலைத்தளங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பிரதமரின் உடல்நிலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது.
பிரதமர் பதவியில் முழு அளவில் ஈடுபடுவதற்கான உடல் ஆரோக்கியம் இல்லாமையினால் அந்தப் பதவியில் இருந்த விலகவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.