முல்லைத்தீவு முடிவால் கிழக்கு தமிழரசுக் கட்சிக்கு பெரும் சிக்கல்(Video)
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது மட்டக்களப்பில் எடுக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்பான முடிவு வட மாகாணத்தில் வைத்து மாற்றப்பட்டது. இதனால் கிழக்கு தமிழரசுக் கட்சிக்கு பெரும் சிக்கல்கள் ஏற்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,மட்டக்களப்பில் எடுக்கப்பட்ட முடிவை வட மாகாணத்தில் வைத்து மாற்றுவதற்கு,தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் போது நாட்டில் இல்லை எனவும் அவர் மூன்று நாட்களுக்கு பின்னர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னரே குறித்த முடிவு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் அவரின் தலைமையில் தான் 2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சபைகள் பிரிக்கப்படும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு, தேர்தலின் போது எமக்குள் ஏற்பட்ட வாத பிரதிவாதங்களை சமாளித்து ஒன்றாக செயற்பட்டோம்.
இந்த முடிவின் விளைவாக தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சிக்கு முழுமையான ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்பு எந்த இடத்திலும் கிடைக்கவில்லை. மாறாக வேறொரு கட்சியிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேவேளை பங்காளி கட்சிக்குள்ளே ஒற்றுமையாக சபையை நடத்த இயலாத அளவிற்கு பல கருத்து முரண்பாடு வந்தது என கூறியுள்ளார்.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan