அந்நியன் அவதாரம் எடுக்கும் ரணில்! பிடுங்கப்படும் பஸிலின் அதிகாரங்கள்(Video)
நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உத்தியோகபூர்வமாக கிடைத்துள்ளது, ஆனால் அவர் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டார் என புலனாய்வுச் செய்தியாளரும் அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தற்போது கிடைப்பதால், மொட்டு எம்.பிக்கள் அவர் வசமாகின்றார்கள். முழு எம்பிக்களும் ரணில் வசமாகின்றனர்.
இவ்வளவு காலம் இருந்த பஸில் ராஜபக்ச விலக்கப்படுவார், மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் விலக்கப்படுவர். அனைத்து எம்பிக்களும் ரணிலின் கட்டுப்பாட்டுக்குள் தானாகவே வந்துவிடுவர். காரணம் மொட்டுவில் இருக்கின்ற எம்பிக்களில் பாதிபேர் புது முகங்கள்.
அவர்கள் ஓய்வூதியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்கள் கொண்டுவரப்படும் மசோதாக்கள் அனைத்திற்கும் அனுமதி அளிப்பர். சிலவேளையில் அவர்கள் மிரட்டப்படலாம் எனவும் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,