இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வரும்போது காத்திருக்கும் நெருக்கடி(Video)
பௌத்த மத குழாம் தான் இலங்கை அரசியலை வழிநடத்துகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை விடயம் சார்ந்து இந்தியா எடுக்கும் முடிவுகள் அல்லது இந்தியாவின் பார்வை சற்று குறைந்தளவிலான பார்வையாகத்தான் இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் மிகப்பெரிய தேசம். இலங்கை ஒரு சிறிய தீவு. இதனை அவர்களின் இராஜதந்திரத்தால் வெற்றிகொள்ள முடியும் என நினைக்கின்றார்கள்.
இலங்கைக்கு, பௌத்த மகா சங்கம் என்பது மிகப்பெரிய பலம். இலங்கை அடிக்கடி பௌத்த மகா சங்கத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும். பௌத்த மகா சங்கம் எப்போதும் இலங்கையை பாதுகாக்கும். பௌத்த மகா சங்கத்தினரை எதிர்த்து இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது. இதுதான் உண்மை.
இதில் இன்னொன்று என்னவென்றால், ரணில் விக்ரமசிங்கவின் ராஜதந்திரம் தான் இங்கே வென்றிருக்கின்றது. ரணில் வி்க்ரமசிங்க ஏறக்குறைய தன்னுடைய குருவான ஜேஆரை மிஞ்சிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பில் காத்திருக்கும் நெருக்கடிகள் குறித்தும் அவர் விபரித்துள்ளார்.