ஜனாதிபதித் தெரிவில் தமிழர் தரப்பால் இடம்பெறப் போகும் பெரும் தவறு! அரசியல் ஆய்வாளர் இந்திரன்(Video)
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தமட்டில் இலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாக வரமுடியாது. பெரும்பான்மைவாதம் இருக்கின்ற ஒரு நாட்டிலே தமிழ் மக்கள் போன்ற தரப்பினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. வரலாற்றில் இது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலை ஒரு பேரம் பேசும் களமாக தமிழ் மக்கள் பாவிக்க முடியும். இவ்வாறு பேரம் பேசும் களமாக பாவித்து அதிலே தங்களுக்குப் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதுதான் அவர்களுக்கு இருக்கின்ற அனுகூலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வாய்ப்பை தமிழ்மக்கள் சரியாக பயன்படுத்தியிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,