இலங்கை புலனாய்வுத் துறையின் தகவலால் சிக்கவுள்ள பலர்! அரசியல் ஆய்வாளர் மயூரன்(Video)
தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் தீவிர நிலையை அடைந்து ஜனாதிபதி மாளிகை முற்றுகை மற்றும் பிரதமர் அலுவலகம் முற்றுகை என்ற அளவுக்குச் சென்றிருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இலங்கையினுடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை புலனாய்வுத் துறை பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த அறிக்கையில், இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்படவுள்ள செய்தியை அறிந்திருந்தோம் என குறிப்பிட்டுள்ளனர். இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது தொடர்பான தகவலும் தெரிவிக்கப்பட்டதாகவும் அரசியல் ஆய்வாளர் மயூரன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,