இலங்கைக்குள் இந்திய இராணுவத்தின் வருகையை உச்சரித்தது யார்! இரகசிய நகர்வுகள் பல (Video)
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை முற்றுகையிடப்பட்ட பின்னர் இலங்கையில் இராணுவத் தரப்பு பற்றித்தான் அதிகமாக பேசப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலை நோக்கி இராணுவத்தினர் படையெடுத்துள்ளதாகவும், இராணுவத்தினர் போராட்ட மையத்தை கையகப்படுத்தப்போவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா அந்த செய்தியை மறுத்திருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதேசமயம் இந்தியத் தூதரகம் திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு தமது படையினரை அனுப்பும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என்று தெரிவித்திருக்கின்றது.
இந்த விடயங்கள் தொடர்பான தெளிவான விளக்கங்களை அவர் எம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.