ராஜபக்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமா ரணில் அரசாங்கம்! எதிரணி பகிரங்க கேள்வி- செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கு சாதகமாக அமையும் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய தரப்பினருக்கு எதிராக இந்த அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமா என்றும் ஆளும் தரப்பினரிடம் கேள்வியெழுப்பினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு சிறந்த வழியாக அமையும்.
ஆகவே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் என்ன? அதனால் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
