எம்மைத் தடை செய்த யுகம் மலையேறிவிட்டது: இனி ரணிலால் முடியாது- செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் வரலாற்றில் இரண்டு தடவைகள் மக்கள் விடுதலை முன்னணியை இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தாலும் தற்போதைய ரணில் அரசாங்கத்தினால் அதை செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி காலத்தில் அவர் செய்தவற்றை ரணிலால் செய்ய முடியாதெனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளின் அடிப்படையில் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது. அந்த யுகம் தற்போது முடிந்துவிட்டது.
மக்கள் விடுதலை முன்னணியை யாராலும் வீழ்த்த முடியாது. உண்மையை யாராலும் அழிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan