மகிந்த ராஜபக்சவை திருடன் என பகிரங்கமாக கூறிய ரணில்! அதிகாரம் கிடைத்த 24 மணிநேரத்தில் பொன்சேகா ஏற்படுத்தப்போகும் மாற்றம்
எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், 24 மணித்தியாலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி, ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை இல்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவை பார்த்து 'திருடன்' என கூறினார். ரணிலை, ராஜபக்சவினர் 'திருடன்' என்றனர். இந்த திருடர்கள் ஒன்றிணைந்து இப்போது அரசாங்கத்தில் உள்ளனர்.
ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பேசப்படுகிறது. 10 தேங்காய்களை திருடியவர் இரண்டு வருடங்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்றால் கோடிக்கணக்கிலும், பில்லியன்கணக்கிலும் திருடியவர்களை குறைந்தது ஒரு வருட காலமேனும் சிறைக்கு அனுப்ப வேண்டும்.
நாட்டில் உள்ள சட்டங்களில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. புதிதாக சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது.
எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், 24 மணித்தியாலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி, ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |