அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை! மனம் திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்
இலங்கையின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரொசான் மஹானாம தாம் அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ரொசான் மஹானாம தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் நடுவராக கடமையாற்றி வருகின்றார்.
அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றபோதே தாம் நினைத்திருந்தால் அரசியலில் பிரவேசித்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மஹானாம போராட்டக்காரர்களுக்கு உதவியிருந்தார் என்பதுடன், உலர் உணவுப் பொதிகளை வறிய மக்களுக்கு வழங்கி வருகின்றார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மஹானாம அரசியலில் பிரவேசிக்கப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையிலே தாம் அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை என ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளை
The ‘Roshan Mahanama Trust’ was successfully launched today to empower Sri Lankan Communities and offer a helping hand to those who are in need.#Roshanmahanama #srilanka #rmt pic.twitter.com/pal7GLIqsG
— Roshan Mahanama (@Rosh_Maha) October 4, 2022
மஹானாம தனது பெயரில் நேற்றைய தினம அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் ஜாம்பவான்களான பிரயன் லாரா, சுனில் கவாஸ்கர், சமிந்த வாஸ் போன்றவர்கள் இந்த அறக்கட்டளைக்கு காணொளிகளை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
