ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் எதிரணிகள்! அடுத்தடுத்து விலகல்-செய்திகளின் தொகுப்பு
நாடு வங்குரோத்து அடைந்தமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளேன்.திருடர்களுடனும், ஊழல்காரர்களுடனும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை தேட முடியுமா? வீழ்ச்சிக்கு காரணமானவர்களே இதிலுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எமது இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த காரணத்தை தேடிப்பார்க்கும் குழுவில் நியமித்துள்ளவர்களை நோக்கும் போது அதில் யாரை நியமித்துள்ளார்கள்? சாகர காரியவசம், மகிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியராச்சி பொருளாதார வீழ்ச்சியை தேடும் குழுவின் உறுப்பினர்களாவர்.
அதில் பாரிய வேடிக்கை என்னவென்றால் அந்த குழுவின் தலைவர் சாகர காரியவசம் பசிலுக்கு சார்பானவர். பசிலை போன்றவர். பசில் ராஜபக்சவே நாட்டின் பொருளாதார அமைச்சர், நிதி அமைச்சர், பொருளாதார வீழ்ச்சிக்கு பதில் கூற வேண்டிய பிரதான நபர். இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் உள்ளது.

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
