வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு விசேடமாக நிதி ஒதுக்கப்படவில்லை! கஜேந்திரகுமார் ஆதங்கம்

Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Kajinthan Nov 21, 2023 02:01 AM GMT
Report

போர் முடிவடைந்த நாளில் இருந்து போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கை ஒரு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக விசேடமாக அறிமுகப்படுத்தி நாட்டினுடைய ஏனைய பிரதேசங்களுக்கு வேறுபட்டதொரு பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

அந்த மக்களுடைய பொருளாதாரத்தை முதற்கட்டமாக பாதுகாத்து அதை வளர்ப்பதற்கான ஒரு திட்டம் ஒன்றை குறைந்த 5 வருடங்களுக்கு செய்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாங்கள் கூறி வருகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விசேட செயற்பாடு

மேலும் கூறுகையில் ,குறித்த பிரதேசம் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுடைய பொருளாதாரத்துடன் போட்டி போட முடியாத நிலையாக உள்ளது. ஆனாலும் எந்த விதத்திலேயும் ஒரு விசேட செயற்பாடு எதுவுமே நடைபெறவில்லை.

வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு விசேடமாக நிதி ஒதுக்கப்படவில்லை! கஜேந்திரகுமார் ஆதங்கம் | Sri Lanka Political Crisis Politics

இந்த விடயங்களை ராஜபக்ச தரப்பு காலத்தில் நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் -அவர்களுடைய மனோநிலை முற்றிலும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது.

ஆனால் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சி புரிந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சியில் இருந்தும் கூட முழுமையாக ரணில் தரப்பை ஆதரித்துக் கொண்டிருந்த காலத்தில் வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு என விசேடமாக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற விடயங்களை கூட்டிகாட்டினோம்.

நாங்கள் கேட்பது ஒரு விசேட ஏற்பாட்டையேயாகும். அவ்வாறு வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சதமும் வடக்கு கிழக்குக்கு ஒதுக்கப்பட்டிராத நிலையில் - மக்கள் மட்டத்தில் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களால் தமது தொகுதிகளுக்கு போகமுடியவில்லை என்றும், அப்படிப்பட்ட ஒரு நிலையை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் எனவும் அரசாங்கத்திடம் கூறிய போது, நாங்கள் வரவு செலவு திட்டத்தில் இந்த விடயத்தை சேர்க்காமல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் விசேட செயற்திட்டத்தினை செய்து வடக்கு கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப் போகின்றோம் என்று 2015 இல் குறிப்பிட்டார்கள்.

ஆனால் 2020 வரைக்கும் 52 நாட்கள் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கி பார்த்தால் எந்தவொரு ஏற்பாடும் நடைபெற்றிருக்கவில்லை.

ஒதுக்கீடு 

வெறுமனே சில நூறு மில்லியன்களை தங்களது எடுபிடிகளுக்கும், தமது அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் வழங்கி தமது வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக கொடுக்கப்பட்டது.

அந்த நிதிகள் தாங்கள் ஏதோ செய்வதுபோல காட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதே தவிர, போரால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தை கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை.

வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு விசேடமாக நிதி ஒதுக்கப்படவில்லை! கஜேந்திரகுமார் ஆதங்கம் | Sri Lanka Political Crisis Politics

அப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இந்த வரவு செலவுத் திட்டத்தில் முதற் தடவையாக வடக்கு கிழக்கிற்கு 4 தலைப்புக்களின் கீழ் - பூநகரி சுண்ணக்கல் செயற்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 1 பில்லியன் ஒதுக்கீடு, பாலியாறு தண்ணீர் திட்டம், 2500 மில்லியன் வீட்டுத்திட்டத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 0.11 வீதமேயாகும். இந்த நிலையில்தான் இனப்பிரச்சினைக்கு காணி பொலிஸ் அதிகாரமற்ற மாகாண சபை 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக உலகத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைக்குப் போனவர்கள் இங்கே இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்குப் போனவர்களிடம் ஏதோ செய்யப்போவதாக கூறிய நிலையில், அவர்களும் ஏதோ தரப்போகிறார்கள் என்றே கதைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வடமாகாணத்துக்கு ஒரு வீதம் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கும் 1.17 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. வடமாகாணம் ஊவா மாகாணத்துக்கு அடுத்து அடிநிலையில் இருக்கிறது. வடக்கு மாகாணம் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகவும் உள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மீள்திருத்த விண்ணப்பம் தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மீள்திருத்த விண்ணப்பம் தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


இன பிரச்சினைக்கு தீர்வு

இன பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்போவதாக சொல்லும் நிலையில் கூட வடக்கு கிழக்குக்கான விசேட கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்றால் அரசாங்கத்தின் மனோநிலையை நாம் நன்கு புரிந்துகொள்ளலாம்.

இந்த அரசாங்கத்தினுடைய தற்போதைய வரவு செலவுத் திட்டம் ஒரு கற்பனையான வரவு செலவுத் திட்டம் எனவும், உரியபட்சம் அவர்கள் கூறியுள்ள இலக்குகளை அடையக்கூடிய வகையில் அமையவில்லை என்றும் பிட்ச் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதே பிட்ச் ஆய்வு மையம் தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படப்போவதாக முன்னரேயே எதிர்வுகூறியிருந்தது.

ஹப்புத்தளையில் திடீரென தோன்றிய பாரிய பள்ளம்: உடனடியாக மக்கள் வெளியேற்றம்

ஹப்புத்தளையில் திடீரென தோன்றிய பாரிய பள்ளம்: உடனடியாக மக்கள் வெளியேற்றம்


குறித்த வரவு செலவுத்திட்டம் கற்பனையானது மற்றும் சாத்தியமற்றது என ஆய்வுகள் சொல்லப்படுகின்ற நிலையில், ஒப்புக்காக சொல்லப்பட்டுள்ள இந்த ஓதுக்கீடுகள் கூட கிடைக்கும் என்பது ஐமிச்சமானதாகும்.

இப்படிப்பட்ட பின்னணியில் , இந்த விடயங்கள்; தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் இடத்தில், வரவு செலவுத்திட்டம் கற்பனையாக பார்க்கப்படும் நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் ஏற்கப்படும் நிலையில் இல்லை. இதனால் எமது அமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்க்கிறது என கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US