அரசைக் கவிழ்க்கவே முடியாது! பிரதமர் தினேஷ் திட்டவட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசு தொடர்ந்தும் பயணிக்கும். சூழ்ச்சிகள் மூலமும், வதந்திகள் மூலமும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது தேர்தல்கள் நடத்துவதற்கான காலம் அல்ல. ஆனால், ஜனாதிபதி நினைத்தால் எந்தத் தேர்தலையும் இந்த வருடம் நடத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம்
எனினும், இந்த வருடம் தேர்தல்களை நடத்த அவர் விரும்பவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்வதே ஜனாதிபதியின் நோக்கம்.
ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரச பங்காளிக் கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்குகின்றன.
எதிரணி வரிசையில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குகின்றன. எனவே, அனைவரும் ஓரணியில் நின்று நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |