ரணில் உருவாக்கும் மாய தோற்றம்!சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி புதிய சட்டத்தை கொண்டுவர முயற்சித்தால் ஜீஎஸ்பி வரிச்சலுகை இல்லாமல் போகுமென்ற அச்சம் அரசிற்கு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை பாரிய பொருளாதாரச் சிக்கல் ஒன்று இந்த நாட்டை பீடித்திருக்கின்றது. அதிலிருந்து இந்த நாட்டை மீட்க போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறி வருகின்றார். அவ்வாறு நாடு மீண்டதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் மிக விரைவிலே நாடு மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு செல்ல இருக்கிறது.
அப்படியான வேளையிலே திரும்பவும் மக்கள் போராட்டங்கள் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் அதை கட்டுப்படுத்துவற்கு இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடனும் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,