ராஜபக்சக்களுக்கு பொருந்தாத அந்த நாள்! ஜூலை மாதத்திற்காக காத்திருக்கும் மக்கள்

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka SL Protest
By Dhayani Jun 09, 2022 11:30 PM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், அந்த போராட்டத்தில் பலர் காயமடைந்ததுடன், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி

இதனை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில், கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி போராட்டமொன்றை இளைஞர்கள் ஆரம்பித்திருந்த நிலையில், இந்த போராட்ட களத்தில் கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமமொன்று அமைக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தை தீர்வின்றி இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ராஜபக்சக்களுக்கு பொருந்தாத அந்த நாள்! ஜூலை மாதத்திற்காக காத்திருக்கும் மக்கள் | Sri Lanka Political Crisis Mahinda Basil Gotapaya

மே மாதம் 9 ஆம் திகதி

இதன் தொடர்ச்சியாக இந்த போராட்டம் கடந்த மே மாதம் 9ம் திகதி வன்முறையாக மாறியது. அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலொன்றை நடத்தி பதவி விலகியிருந்ததுடன்,இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட தரப்பினர், அங்கிருந்து வெளியேறி பேரணியாக காலி முகத்திடலை நோக்கி சென்றிருந்தனர்.

இவ்வாறு சென்ற குழுவினர், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம பகுதியிலுள்ள கூடாரங்களுக்கு சேதம் விளைவித்து, அமைதி வழியில் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில்,இது பாரியளவில் வன்முறையாக மாறி பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

ராஜபக்சக்களுக்கு பொருந்தாத அந்த நாள்! ஜூலை மாதத்திற்காக காத்திருக்கும் மக்கள் | Sri Lanka Political Crisis Mahinda Basil Gotapaya

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பல நாடாளுமன்ற, அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான பல சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் தலைமறைவாகியிருந்தது.

ராஜபக்சக்களுக்கு பொருந்தாத அந்த நாள்! ஜூலை மாதத்திற்காக காத்திருக்கும் மக்கள் | Sri Lanka Political Crisis Mahinda Basil Gotapaya

ஜூலை 9 ஆம் திகதி

இவ்வாறான பின்னணியில், நேற்றைய தினம் ஜூலை 9 ஆம் திகதி தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்திருந்ததுடன்,இனி வரும் நாட்களில் எந்தவொரு அரச நிர்வாக பதவிகளையும் தான் வகிக்கப் போவதில்லை எனவும், தன்னை நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பசில் ராஜபக்ச அறிவித்திருந்தார்.

ராஜபக்சக்களுக்கு பொருந்தாத அந்த நாள்! ஜூலை மாதத்திற்காக காத்திருக்கும் மக்கள் | Sri Lanka Political Crisis Mahinda Basil Gotapaya

இந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்ச்சியா நடந்தேறியுள்ள நிலையில்,ராஜபக்சக்களுக்கு 9 என்பது பொருத்தமற்ற நாள் எனவும்,அரசியல் வாழ்க்கையில் பல மறக்க முடியாத சம்பவங்களை பதிவு செய்த நாளாகவும் இந்த நாள் பலர் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

ராஜபக்சக்களுக்கு பொருந்தாத அந்த நாள்! ஜூலை மாதத்திற்காக காத்திருக்கும் மக்கள் | Sri Lanka Political Crisis Mahinda Basil Gotapaya

ஏப்ரல் 9ம் திகதி தொடங்கிய போராட்டம்..! மே 9 ஆம் திகதி வீட்டுக்கு சென்ற மகிந்த..! ஜூன் 9 ஆம் திகதி வீட்டிற்கு சென்ற பசில்! இந்த வரிசையில் அடுத்த ஜூலை 9ம் திகதி என்ன நடக்கும் என்பதை பார்ப்பதற்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.   


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US