ராகுல் காந்தி கைது செய்யப்படுவாரா...!
இந்திய பிரதமர் மோடியை காங்கிரஸ்,எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி திருடன் என்று பகிரங்கமாக பொது மேடையில் கூறிவிட்டார் என்று குஜராத் நீதிமன்றில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அதன் பிரகாரம் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு 2 வருட சிறை தண்டையும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழக்கப்பட்டது.
அதன் பிரகாரம் டெல்லியில் அரசால் வழக்கப்பட்டு வந்த எதிர்கட்சி தலைவருக்கான இல்லமும் மோடி அரசால் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய குஜராத் நீதிபதிக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார்.
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்திய குற்றவியல் சட்டம் இலக்கம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது.
2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் முன்னிலையாகி, விளக்கம் அளித்தார்.
சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மார்ச் 23 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா அறிவித்திருந்தார்.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை
இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
அனைத்து தரப்பினரும் முன்னிலையான நிலையில் தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட் வர்மா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து மனுதாரர் புர்னேஷ் மோடி தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, “சட்டங்களை இயற்றும் மக்களவையின் எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு சட்ட விதிகள் அனைத்தும் தெரியும். அவரே விதிகளை மீறியுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றார்.
ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, “வழக்கில் மன்னிப்பு கோர விரும்பவில்லை. ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகவே பேசினார். அவர் தனது கடமையை மட்டுமே செய்தார்” என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார்.
இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் பிணை கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாட்கள் பிணை வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.
ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கூறும்போது, “இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “எனது மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சை அதை அடையும் வழி. இது காந்தியடிகளின் பொன் மொழி” என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி. பதவி பறிபோனது
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிபோனது சூரத் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை ஒரு மாதத்துக்கு மட்டும் நிறுத்தி வைத்தது.
தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவரது தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தப்புமா, பறிபோகுமா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் அவரது எம்பி பாதையை நீக்கி அவருக்கு டெல்லியில் துக்ளக் ஒழுங்கையில் அமைத்துள்ள அரசு வழங்கி வந்த இல்லத்தையும் பிடுங்கியது மோடி அரசு.
தற்போது டெல்லியில் கிழக்கு நிசாமுத்தீன் பக்கமுள்ள டெல்லியின் முன்னாள் முதல்வர் சீலா தீக்சித்தின் இல்லத்தில் இந்த வாரம் குடியேறுகின்றார்.
பாஜகவினரின் குறி என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தீர்ப்பு வெளியான நாளே பதவி நீக்கம் செய்யலாம் என்று குரல் கொடுத்து வந்தனர் அந்த வகையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்க வேண்டும்" என்றும் பிஜேபி பட்டையை கிளப்பி வந்தது.
குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி, எம்எல்ஏக்களை தீர்ப்பு வெளியான நாளில் இருந்தே பதவி நீக்கம் செய்யும் சட்டம் ஏற்கனவே உள்ளது.
இதையடுத்து, ராகுல் காந்தியின் வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும்.
ராகுல் மீதான தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால் மட்டுமே, அவரது எம்.பி. பதவி தப்பும்.
இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, "ராகுல் வழக்கில், அவர் உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்ய முடியும். ஒருவேளை உச்ச நீதிமன்றமும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், கண்டிப்பாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். அவர் விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது" என்றனர்.
சூரத் உயர் நீதிமன்றில் மேல்முறையீடு
ராகுல் காந்தியின் தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஆனால் குஜராத் மாநிலம் முற்றாக மோடி மற்றும் அமித்சா கட்டுப்பாட்டில் உள்ளதால் ராகுலுக்கு நீதி கிடைக்காது என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் சூரத் உயர் நீதிமன்றில் ராகுலுக்கு எதிராக அவரது மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்திருந்தது அதாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று இரண்டாவது தீர்ப்பு வெளியானது.
குஜராத் மேல் நீதிமன்றில் மேல்முறையீடு
ராகுல் காந்திக்கு எதிராக சூரத் உயர் நீதிமன்றம் வழங்கிய இரண்டாவது தீர்ப்பை எதிர்த்து ராகுல் தரப்பு குஜராத் மேல் நீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தார்கள்.
ஆனால் அங்கும் ராகுலுக்கு எதிராக அவரது மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்திருந்தது அதாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேன்முறையீட்டு தலையிட விரும்பவில்லை என்று மூன்றாவது தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது.
அதாவது அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் ராகுல் காந்தியின் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு
சூரத் நீதி மன்றம் குஜராத் நீதி மன்றம் என்று 3 கட்டங்கள் தாண்டி இறுதியாக நான்காம் கட்டமாக டெல்லி உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்துள்ளது ராகுல் தரப்பு, இங்குதான் இறுதி தீர்ப்பு வரவுள்ளது.
ஏற்கனவே ராகுலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மோடியின் பிஜேபி ஆட்சியில் அதிக வழக்குகள் அரசுக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.காரணம் அரசுக்கு ஆதரவான சகல வழக்குகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தலையிட்டு நீதிபதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வழக்கு தீர்ப்புகளை அரசுக்கு ஆதரவாக/சார்பாக எடுத்துக் கொள்கின்றார் என்ற கருத்து பரவலாகவே உள்ளது.
இதற்கு சாட்சியாக ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் மாஜிஸ்திரேட் வர்மாவுக்கு ராகுல் காந்தியின் தீர்ப்பு வெளியாகி அடுத்த மாதமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது மற்றும் உயர் இடங்களில் பிஜேபி யின் ஆதரவுகொண்ட சங்கி அணியே உள்ளது.
தற்போது குஜராத் மாநிலத்தில் 3 நீதிமன்றங்கள் கடந்து 3 மன்றுகளிலும் ராகுல் காந்திக்கு எதிராகவே தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் இறுதியாக டெல்லி உச்ச நீதிமன்றின் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளது ராகுல் அணி.
ஆனால் உச்ச நீதிமன்றில் நல்ல வாத திறமை கொண்ட வக்கீல்கள் மூலமாக இந்த வழக்கை கையாளவில்லை என்றால் இறதியாக ராகுல் காந்தி டெல்லி உச்ச நீதிமன்றில் தோல்வி கண்டு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலில் போட்டியிட முடியாமல் 2 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.
ஆனால் டெல்லி உச்ச நீதிமன்றில் ராகுல் காந்திக்கு சார்பான தீர்ப்பு வெளிவரும் என்று ராகுல் காந்தி பெருத்த நம்பிக்கை கொண்டுள்ளது.உண்மையும் அதுதான்.
குஜராத் மாநிலத்தில் ராகுலுக்கு எதிரான இந்த வழக்கு சப்பை கேஸ்.ஆனால் குஜராத் மாநிலத்தில் ராகுலுக்கு எதிராக 3 நீதிமன்றங்களிலும் நீதி மறுக்கப்பட்டு நீதிபதிகளின் கைகள் கட்டப்பட்டு அநீதி இளைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து பரவலாகவே உள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ...
ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை நடைப்பயணத்தை தொடங்கினர்.
பல மாநிலங்களைக் கடந்து அவர், சுமார் 3750 கிலோமீட்டர் பயணம் செய்து, பெப்ரவரியில் காஷ்மீரை அடைந்து அங்கு பயணத்தை முடித்தார்.
கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் வழியாகச் சென்று ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் வழியாகச் சென்று இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நடை பயணத்தை முடித்தார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்த நடை பயணத்தின் போது ராகுலின் ஏழ்மை. இனமத பேதமின்றி அன்பு பாசம் கனிவு நாடு முழவதும் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியுள்ளது.
அத்துடன் இந்த நடை பயணம் காங்கிரஸ் கட்சிக்கு பாரிய செல்வாக்கை அதிகரித்துள்ளது.
இந்த நடை பயணம்தான் பிஜேபி கட்சிக்கு பெருத்த எரிச்சலை ஏற்படுத்தியது.அதன் வெளிப்பாடுதான் ராகுல் மீது சூரத் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.
பாஜகவை எதிர்த்து 17 கட்சிகள் ஒன்றிணைகின்றன
பிஜேபி கட்சிக்கு இன்னும் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் இந்தியா என்னும் நாடு இருக்காது என்று பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் பாஜகவை எதிர்த்து கடந்த மாதம் 17 கட்சிகள் ஒன்றிணைந்து போர்க் கோடி தூக்கியுள்ளது.
அதனால் பிஜேபி அச்சம் அடைந்துள்ளதுர் மறுபுறம் எதிர்வரும் லோக் சபை தேர்தலில் பிஜேபி பெருத்த தோல்வி காணும் என்று பல கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
இந்தக் கூட்டணி அமைந்தால் 525 மொத்த இடங்களில் 400 க்கும் அதிகமான இடங்களை இந்தக் கூட்டணி கைப்பற்றும் என்று இப்போவே கணிப்பீடுகள் சொல்கின்றது.
தற்போது பிஜேபி ராகுல் காந்தியை தனது எதிரியாக பார்த்து அச்சம் அடைகின்றது.
காரணம் எதிர்வரும் லோக் சபா தேர்தலில் ராகுல்கந்தியை போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் சூரத் நீதிமன்றை பிஜேபி பயன்படுத்தியது.
இப்போது டெல்லி உச்ச நீதிமன்றையும் பிஜேபி பயன்படுத்தும் மிக அதிக வாய்ப்புள்ளது.
லோக் சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பிரியங்காவா?
டெல்லி உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு வழங்கினால் ராகுல் காந்தி எதிர்வரும் லோக் சபா தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும் நிலை உருவானால் பிரியங்கா காந்தி களமிறங்கும் மிக அதிக வாய்ப்புள்ளது.
காலம் சென்ற பாட்டிம்மா இந்திரா காந்தியின் சாயல் கொண்ட பிரியங்கா பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் அமோக வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
பிரியங்கா ஏற்கனவே பல தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார். இறுதியாக கர்நாடக மாநில தேர்தலில் பிரியங்கா களமிறங்கி கட்சிக்கு பெருத்த வாக்கு வேட்டை ஆதரவுகளை அமைத்துக் கொடுத்தார்.
அன்பு,பாசம்,இரக்கம் கொண்ட காந்தி தேசத்திக்கு ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி போன்றவர்களின் கைகளில் இந்திய ஆட்சி போய்ச்சேர வேண்டும்.
இந்திய தேசத்தின் ஆட்சி ஒரு போதும் இன மத வெறி பிடித்தவர்களின் பிடியில் இருக்க கூடாது. பாஜகவை எதிர்த்து ஏற்கனவே இணைந்த 17 கட்சிகள் நேற்றும் ,இன்றும் பெங்களூரில் மாநாடு கூட்டியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலில் பிஜேபி வெற்றி பெறும் வாய்ப்பு மிக குறைவுதான். ஆனாலும் வாக்களிப்பு இயந்திரத்தில் (Electronic Voting Machine) பிஜேபி தில்லுமுல்லு செய்யவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பிரகாசமாவே உள்ளது.