கட்சியின் மறுமலர்ச்சி செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமது கட்சியின் மறுமலர்ச்சிக்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய கட்சி நடவடிக்கைகள் தொடர்பான ஆரம்பக் கூட்டம் கொழும்பில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, மொட்டு கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பொன்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சவின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் மொட்டு கட்சியின் எதிர்காலப் போக்கு குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.