சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமைக்கு சமூகமட்ட சீரழிவே காரணம்! இ.இளங்கோவன்
இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.
யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று இடம்பெற்ற நூற்றாண்டு விழாவின் கல்லூரிதின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தீர்க்கமான நல்ல முடிவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,''சமூக பாதுகாப்பென்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதொன்றாகும், அன்றைய காலங்களில் கிராமங்களில் ஒரு அதிபர் அல்லது ஆசிரியர் வீடுகளில் மக்கள் காலையில் கூடுவார்கள் மக்களை வழிப்படுத்துபவராக அவர்கள் காணப்பட்டார்கள்.
அது தீர்க்கமான நல்ல முடிவுகளை தருகின்ற சமூகங்களை கொண்டிருந்தது.
இன்று இது மாறியுள்ளது மீண்டும் இவ்வாறு வரவேண்டும் என்றால் முன்பு போல இறுக்கமான கட்டமைப்புக்கள் சமூகங்களில் உருவாக்கப்படவேண்டும்.
பாரம்பரிய விழாக்கள்
அதுமட்டுமல்ல பாரம்பரிய விழாக்களை கொண்டாடுவதன் மூலம் அதனை அடுத்த சந்ததிகளுக்கு ஊட்டவேண்டிய தேவை உள்ளது.
கல்வியில் எவ்வாறான சீரமைப்புக்களை ஏற்படுத்தினாலும் சிறந்த ஆசிரியரால் தான் முழுமையான மாணவனை உருவாக்க முடியும்.
சமூகத்தில் சவால்களை சந்திக்ககூடிய மாணவனை உருவாக்குவது சிறந்த ஆசிரியரால் தான் முடியும்.இதில் கலாசாலையின் பணி மகத்தானது.''என கூறியுள்ளார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
