பெரமுன மேலும் சிதறும்! டலஸ் அணி பலம் பெறும்: வெளியாகியுள்ள தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் ஆதரவு அணியில் இணையக்கூடும் என மொட்டுக் கட்சியின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், விரைவில் தாவல் அரங்கேறும் எனவும் தெரியவருகின்றது.
புதிய அரசியல் இயக்கம்

பெரமுனவில் இருந்து டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர்.
அவர்கள் தற்போது புதியதொரு அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முயற்சி

இந்நிலையில், டலஸ் தரப்பை இணைத்துக் கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், விமல் தரப்பும் முயற்சித்து வருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் டலஸ்
பக்கம் சாயவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri