சபாநாயகரை கடுமையாக சாடிய பீரிஸ்
இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய 13 பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு
அதன்பின்னர் 3 இல் 2 பெரும்பான்மையுடனேயே நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த பரிந்துரைகள் எவையும் முழுமையாக செவிசாய்க்காமல் சபாநாயகர் அதனை மீறி சட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சுயாதீனத்தன்மை 93 ஆண்டுகளாக பேணி பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அதனை மீறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.