நாட்டின் வரலாற்றை மாற்றும் ஜனாதிபதித் தேர்தல் : நளிந்த ஜயதிஸ்ஸ
எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்வு கூறியுள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் வரலாற்றை மாற்றும் ஜனாதிபதித் தேர்தல்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
விரைவில் நாட்டை மாற்றும் ஒரு சுப நேரம் வரும் அதுவே இந்நாட்டின் வரலாற்றை மாற்றும் ஜனாதிபதித் தேர்தலாக அமையும்.
சகுனங்கள் மிகவும் நல்லது, மக்கள் தரப்பில் நல்ல சகுனங்கள் தென்படத் தொடங்கி இருக்கும் வேளையில், மறுபுறம் அரசு தரப்பில் துர்ச்சகுண அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன .
வரலாற்றில் முதன்முறையாக மக்கள் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் வரவுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம்.
அனுரவுக்கு வெற்றி
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாரா என்பது குறித்த கணக்கெடுப்பு இந்த நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது.
சந்திரிக்காவும் மகிந்தவும் அரசியலமைப்பை மாற்றிய பின் மீண்டும் வர முயற்சித்தனர். ஆனால் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என அரச புலனாய்வு சேவை உள்ளிட்ட புலனாய்வுத் துறைகளின் அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளும் வெளிப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |