ஐ.நா.பிரதிநிதியிடம் சிறீதரன் எம்.பி கையளித்த மனு
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரும் பரிந்துரைப்பு மனு ஐ.நா.பிரதிநிதியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கையளிக்கப்பட்டது.
இலங்கை தீவில் நீதித்துறை மீது அரச நிர்வாக துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்க கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தை பாதுகாக்க கோரியும் போராட்டம் நடைபெற்றது.
கவனயீர்ப்பு போராட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் , கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்ரெஸுக்கு
அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம்
கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கையளிக்கப்பட்டது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
