இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல! சதித்திட்டம் எதற்கும் இடமளியேன்: ஜனாதிபதி திட்டவட்டம்
மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும். அந்தச் சூழ்ச்சிகளை - சதித்திட்டங்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல
அவர் மேலும் தெரிவிக்கையில், "இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல. இது ரணிலின் ஆட்சி. எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை.
மக்களுக்காகவே நாட்டை பொறுப்பேற்றேன். ஜனாதிபதி பதவியை ஏற்றேன். எந்தத் தடைகள் வந்தாலும் மக்கள் பலத்துடன் அதனைத் தகர்த்தெறிந்து நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீட்டெடுப்பேன்.
நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன். கஷ்டப்படும் மக்கள் மீண்டெழுவார்கள். மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காண்பேன்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |