வங்கியில் வைப்பிலிடப்பட்ட பெருந்தொகை பணம்! பின்னணி குறித்து வெளிவரும் தகவல்கள்
கடந்த வருடம் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களில் பங்கேற்ற பலருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டமை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தெரியவந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(09.07.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், உலக நாடுகள் பலவும் போராட்டங்களின் காரணமாக முடங்கிப் போயுள்ள நிலையில், ஒரு வருடத்திற்குள் அந்த சவால்களை வெற்றிக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்
சாியான தலைமையினால் முடிந்துள்ளது.
பணவீக்கம், வங்கி வட்டி, மின் கட்டண குறைப்பு, வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வருகை, ஏற்றுமதி, பங்குச் சந்தை , வெளிநாட்டு கையிருப்பு வீதம் என்பவற்றில் முன்னேற்றத்தை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.




திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
