தொடரும் கைதுகள் : மேலும் 952 பேர் சிக்கினர்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 952 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல்
அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 10 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் விசேட பணியகத்தால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 29 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சுமார் 3 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 4,310 போதைமாத்திரைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
