தென்னிலங்கையில் பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற மக்கள்
பாணந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.
தாக்கப்பட்ட நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாணந்துறை பிங்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்க நகைத் திருட்டு
நேற்று முன்தினம் மதியம் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
இவரை சிலர் மடக்கி பிடித்து பாணந்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் சற்று சிரமப்பட்டதால் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸ் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நபர் உயிரிழப்பு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சடலத்தின் பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
