திருகோணமலையில் கோர விபத்து; 3 பேர் உயிரிழப்பு (photos)
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் அதி திவிர சிகிச்சை பிரிவில் முதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 15பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
64ம் கட்டை- பச்சனூர் பகுதியிலுள்ள விகாரைக்கு சேறுவில பிரதேசத்திலிருந்து சிரமதான பணிக்காக உழவு இயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரத்தின் இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு |




900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri