இலங்கை காவற்துறை பயிற்சி நிறுத்தம்! சர்வதேச அமைப்பு வரவேற்பு

Srilanka Scotland
By Dhayani Nov 26, 2021 04:23 PM GMT
Report

ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாக இலங்கை காவற்துறை பயிற்சியை இடைநிறுத்த ஸ்கொட்லாந்து காவல்துறை எடுத்த தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை அமைப்பு வரவேற்றுள்ளது.

மனித உரிமைகள் காரணமாக இலங்கை காவற்துறைக்கு பயிற்சிகளை தொடர வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக ஸ்கொட்லாந்து காவல்துறை தலைமை அதிகாரி இயன் லிவிங்ஸ்டன் அந்த நாட்டில் இடம்பெற்ற உயர் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக அதிகரித்துள்ள கைதுகள், தடுப்புக்காவல் மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை காவல்துறைக்கு ஸ்காட்லாந்து காவல்துறையினால் வழங்கப்படும் பயிற்சியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரச்சாரம் செய்து வரும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் (ITJP), இது காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என வர்ணித்துள்ளது.

“ஸ்கொட்லாந்து காவல்துறை இலங்கையில் பயிற்சியை இடைநிறுத்த முடிவு செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

2016ஆம் ஆண்டு முதல், சித்திரவதைகள் தொடர்வதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்தப் பயிற்சியை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் எமக்கு இது ஒரு பெரிய வெற்றி” என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் யாஸ்மின் சூகா கூறியுள்ளார்.

“இலங்கையில் பல தசாப்தங்களாக சித்திரவதைகள் தலைவிரித்தாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இதுவே பெரும் பலம். அவர்களில் சிலர் ஸ்கொட்லாந்தில் வசிக்கின்றனர்.

2016 ஆம் ஆண்டு இலங்கையில் அரசாங்கம் ஒரு மோசமான சித்திரவதை கூடத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி ஒருவரை சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு தனது பிரதிநிதியாக அனுப்பும் துணிச்சலைக் கொண்டிருந்தது.

இதன்போது சித்திரவதைகள் நடைபெறவில்லை என இலங்கை அதிகாரிகள் மறுத்து, தங்கள் நம்பகத்தன்மையை வலுப்படுத்த பிரித்தானிய பயிற்சியை மேற்கோள் காட்டினர்.

” கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் நடத்தப்படும் காவல்துறை பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவடையவுள்ளது.

கடந்த மே மாதம் அதை நீட்டிக்கலாமா என்பது தொடர்பில் ஆராய பிரித்தானியா தீர்மானித்தது. இந்தப் பயிற்சியில் சமூகக் காவல் மற்றும் பாலியல் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது மற்றும் காவல் சேவையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று ஸ்கொட்லாந்து காவல்துறை தெரிவிக்கின்றது.

இலங்கை மற்றும் பிரித்தானிய காவல்துறையால் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அம்பலப்படுத்திய புலனாய்வு ஊடகவியலாளர் பில் மில்லர், இலங்கை சமூக காவல் சேவையில் பிரித்தானிய நிதியை பயன்படுத்துவதை வன்மையாக கண்டித்திருந்தார்.

எவ்வளவு பயிற்சிகளை வழங்கினாலும் மனித உரிமை மீறல்கள் ஓயாது எனத் தெரிவித்துள்ள யஸ்மின் சூகா, சித்திரவதை விடயத்தில் நியாயத்தை நிலைநாட்ட சர்வதேச சமூகம் பாடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

“எல்லா வகையான பயிற்சிகள் இருந்தபோதிலும், இலங்கை காவல்துறையும் இராணுவமும் தொடர்ந்து சித்திரவதைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.

சர்வதேச சமூகம் செய்ய வேண்டியது என்னவென்றால், நிறுவன மீறல்களைத் தடுக்க போதுமான பயிற்சி மற்றும் சாத்தியமான வளர்ச்சிக்கு உதவி வழங்குவதை விட, சித்திரவதைக்கான பொறுப்புக்கூறலில் கவனம் செலுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கையில் காவல்துறை, சர்வதேச அளவில் உச்சபட்ச ஒத்துழைப்பை இழந்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US