பிரபல அரசியல்வாதியின் ஆதரவாளரால் முன்னெடுக்கப்படும் தகாத செயற்பாடுகள்
கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவரும் தகாத தொழில் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதி பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் நடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை சுற்றிவளைத்து அங்குள்ள இரண்டு பெண்களையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் தம்புத்தேகம மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் உள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கண்டி பொலிஸ் எல்லைக்கு அப்பாலும் பல தகாத நிலையங்களை அந்த நபர் நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan