17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கருதப்பட்டு நீதிமன்றத்தினால் 17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் 16 ஆம் திகதி ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கல்வத்த - வெலிப்பென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வெலிப்பென்ன, பயகால, மீகதென்ன, பெருவளை, தொடங்கொட மற்றும் மதுகம பொலிஸ் நிலையங்களில் அவர் மீது பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு அவருக்கு நீதிமன்றத்தினால் 17 தடவைகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
