நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள்
நாடளாவிய ரீதியில் பல குற்றச்சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அவற்றுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சம்பவங்களே அதிகமாக பதிவாகின்றது.
கொழும்பு
கொழும்பு - முகத்துவாரம் மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஒரு தொகை போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில் 78 ஆயிரத்து 700 போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
சந்தேகநபர் இந்தப் போதைப்பொருள் தொகையைச் சட்டவிரோதமான முறையில் வான் மற்றும் கடல் மார்க்கமாகக் கொண்டு வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி : ராகேஷ்
யாழ்ப்பாணம்
வடமராட்சி- கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் சட்டவிரோத மதுபானங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றை தினம் (21/11/2022) வேறு விசாரணைகாக அழைப்பாணை ஒன்றை வழங்க பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அங்கு அப் பெண் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதனை அவதானித்துள்ளனர்.
உடனடியாகவே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் 10 போத்தல் மதுபானத்தையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் கட்டைக்காடு பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுவருவதாகவும், பொலிஸாரால் பலமுறை கைது செய்யப்பட்டும் சட்டவிரோத மதுபான தொழிலை கைவிடவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் இடம் பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுத்து அதனால் ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்குமாறு பொதுமக்கள் பொலிஸாரை கேட்டு கொள்கின்றனர்.
அத்துடன் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், 750 மில்லிலீட்டர் கசிப்புடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி : எரிமலை மற்றும் கஜிந்திரன்
கல்முனை
250 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை(21) இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வீரமுனை பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மேற்குறித்த போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை சந்தேக நபர் கைதானார்.
இவ்வாறு கைதான சந்தேகநபரிடம் இருந்து 250 கிராம் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்று பொருட்களுடன் சம்மாந்துறை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : பாரூக் சிஹான்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam
