தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி - துப்பாக்கி சூடு நடத்தியதால் குழப்பம்
களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமகி ஜன பலவேக அமைப்பாளருமான பீ.டீ.ஜயரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிரணியினரை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை திரானந்த மாவத்தை பிரதேசத்தில் உள்ள தனது தனியார் தேயிலை தோட்டத்தை பார்வையிட வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த குழு
குறித்த சந்தர்ப்பத்தில், அவரது தேயிலை தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த குழுவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அவர்களில் ஒருவர் ஜயரத்னவை கோடரியால் தாக்க முயன்றுள்ளார். இதன் போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னிடமிருந்த 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
அந்த துப்பாக்கிக்கு சட்டப்பூர்வ உரிமம் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this