பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்
பொலிஸ் திணைக்களத்தின் துரித அழைப்பு இலக்கங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிசார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் இதுவரை காலமும் 119 எனும் துரித அழைப்பு இலக்கம் மூலமாக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வகைப்படுத்தி அவற்றுக்கு புதிய துரித அழைப்பு இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
துரித அழைப்பு இலக்கங்கள்
🛑 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க துரித அழைப்பு இலக்கம் -109
🛑 குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு – 119
🛑 ஏதேனும் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் தமிழ்மொழியில் தகவல்களை வழங்குவதற்கு – 107
🛑 பொலிசார் மேற்கொள்ளும் ஏதேனும் மோசடிகள், இலஞ்சம் கோரல் போன்ற தகவல்களை வழங்குவதற்கு – 1997
என்றவாறாக துரித அழைப்பு இலக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



