அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள்
மத்திய மாகாணத்திற்குட்பட்ட தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர், தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பொது மயானத்திற்கு அருகில் நடந்து சென்ற ஒருவர் இதனை பார்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைக் கண்ட நபர் உயிரிழந்தவரின் மகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகள் கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இறந்தவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தலையை சூனியம் செய்வதற்காக எடுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தென்னகோன்புர பிரதேசத்தில் வசித்து வந்த 80 வயதான பெண், கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும், அன்றைய தினமே சடலம் புதைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
