ஏழு விடுதிகள் சுற்றிவளைப்பு! 32 யுவதிகள் உட்பட 39 பேர் சிக்கினர்
கல்கிசை, மாலம்பே, கடுவெல மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாக நடத்தப்பட்ட 7 விபசார நிலையங்களைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது 32 யுவதிகள் உட்பட 39 பேர் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 நிலையங்களுக்கும் உரிமம் இல்லை
சிக்கிய 7 நிலையங்களுக்கும் உரிமம் இல்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரவு வேளைகளில் திறக்கப்படும் இந்த நிலையங்கள் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தொடர் தகவலின் அடிப்படையில் நீதிமன்றங்களில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான சுற்றிவளைப்பில் 7 பொலிஸ் குழுக்கள் பங்கேற்றுள்ளதுடன், பொலிஸ் முகவர்கள் ஊடாக குறித்த இடங்களை விபசார நிலையங்கள் என உறுதிப்படுத்திய பின்னரே இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தூரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும், பொருளாதார நெருக்கடி காரணமாக தெற்கில் வேலைக்கு வந்து கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக இரவு வேளைகளில் இந்த நிலையங்களில் வேலை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
