ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தி
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் திகதி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிறுவப்பட்டது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலமையில் இந்த முன்னணி நிறுவப்பட்டது.
கடந்த காலங்களில் அமோக வெற்றி
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோகமாக வெற்றியை கண்டது.
அதன் பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் கட்சியின் ஆறாம் ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் மத வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.