ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் கட்டியெழுப்பும் ராஜபக்சர்கள்!
இலங்கையில் ராஜபக்சர்களுக்கான எதிர்ப்புக்கள் குறைந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நகர்வுகள் இடம்பெறுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான முதல் கட்டம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய இரவு விருந்தின்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்துபசாரம், கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
குறித்த சந்திப்பு மற்றும் விருந்துபசாரத்தில் மொத்தம் 62 அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலை குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒரு பெரிய பேரணியை
நடாத்துவதுடன், பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்
என்று இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
