ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் திட்டத்தை வகுத்துள்ள அரசாங்கம்
2028 ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்தது ஒரு பதக்கமாவது வெல்லும் நோக்கில் அரசாங்கம் விரிவான தேசிய திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, நான்கு பிரிவுகளின் கீழ் 105 திறமையான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாதாந்தம் 210,000 ரூபா மற்றும் 110,000 ரூபா வீதம் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாலம், கட்டிடங்கள் கட்டுவது போல வீரர்களை உருவாக்க முடியாது. அதற்குத் தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டமிடல் அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கையைப் போன்ற பொருளாதார நிலை கொண்ட கியூபா இதுவரை 18 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 244 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை இதுவரை வென்றுள்ளதே இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் திறமையான வீரர்களை முறையாக அடையாளம் கண்டு, சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, 2028 ஒலிம்பிக்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் இலக்கை அடையும் திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam