3 ரயில்களின் பயணத்தை நிறுத்திய அடையாளம் தெரியாத சடலம்
கொழும்பு - மலையகத்திற்கான ரயில் பாதையில் சடலம் ஒன்றினால் ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கித்தல் எல்ல ஹில்ஓய ரயில் நிலையங்களுக்கு இடையில் 166 மயில் தூரத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் காரணமாக மூன்று மார்க்கத்திற்கான ரயில்கள் இடைநடுவில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில் சேவைகள் நிறுத்தம்
இன்று காலை 5.55க்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட உடரட்ட மெனிக்கே ரயில் எல்ல நிலையத்திலும், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரண்டு அஞ்சல் ரயில்கள் பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளையிலும் நிறுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சடலத்தை அகற்றுவதற்காக மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.



