அரசியல்வாதிகளின் உருவ பொம்மைகள் மீது எச்சில் உமிழ்ந்த மக்கள் (Photos)
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலகுமாறு கூறி வட்டுக்கோட்டையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கோட்டா, மஹிந்த, ரணில், பசில் ஆகியவர்களது உருவ பொம்மை மீது மக்கள் தாக்குதல் நடத்தினர்.
உருவ பொம்மைகள் மீது எச்சில் உமிழ்ந்த மக்கள்
வட்டுக்கோட்டை - மாவடி சந்தியில் இருந்து ஆரம்பமான இப் போராட்டமானது பேரணியாக சித்தங்கேணி சந்தி ஊடாக சென்று சங்கானை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சதாசிவம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் கோட்டாபய, மஹிந்த, பசில், ரணில் ஆகியோரின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் வைத்து பொம்மையை கொட்டன்களால் தாக்கி அதன்மீது எச்சில் உமிழ்ந்து தீயிட்டு எரித்தனர்.
காலி முகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவிலான படையினர்!பாதுகாப்பு அமைச்சு மறுப்பு |






