வடக்கின் பிரச்சினையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சினையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும்
வடக்கின் பிரச்சினையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சினையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவருமான வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பாக பொதுக்கருத்தரங்கு இன்று யாழில், வசந்தமுதலிகே தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாதச்சட்டம் நீக்கப்பட வேண்டும்
‘மீதியாக இருக்கும் விடயம் போராட்டம், அதில் ஒன்றிணைந்து போராடுவதே நிலைப்பாடு அதனை பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் நம்புகின்றது. வடக்கில் காணிப்பிரச்சினை, இராணுவ மாயக்கப்பட்ட பிரச்சினை, வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் எனைய பிரச்சினைகள் தீர்த்துவைக்ககூடிய முதற்படியின் பயங்கரவாதச்சட்டத்தின் ஊடாக கொண்டுசெல்ல முடியும்.
வடக்கின் பிரச்சினையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சினையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்படவேண்டும். அதுதான் எமது நிலைப்பாடு.
அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது. இந்த பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான கருத்தாகவே காணப்படுகின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டம்
கடந்த காலத்தில் மக்கள் அணிவகுப்பில் நின்றதை அவதானித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், என்ற விடயத்திற்கு துணைநின்ற எங்களுக்கு அரசின் மூலம் அறிவிக்கப்பட்டது பயங்கரவாதம் என்றனர்.
டிலான் அலெஸ், ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவின் ஒன்று சேர்ந்து பொய்யான சாட்சிகளை உருவாக்கி தடுத்துவைத்து விசாரணை செய்யும் நோக்கில் அவர்கள் இரண்டு வருடங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கினர்.
1979 ஆவது ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதச்சட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரையான காலம் வரை 100க்கு மேற்பட்டவர்கள் இன்னும் தடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்போது அரசாங்கம் புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். அதில் பயங்கரவாத
எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.
அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட
முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர்.
இப்போது பொஸிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மூலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை
நிலைநாட்டமுடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் ‘ என்றார்.