வங்கி செயற்பாடுகளில் திடீர் மாற்றம்! அதிகரிக்கும் வட்டி வீதங்கள் (Video)
வங்கிகளில் நிலையான வட்டி வீதத்தில் ஒப்பந்தம் செய்து கடன் பெற்றவர்களின் ஒப்பந்தத்தை மீறி அனைத்து வங்கிகளுமே வட்டி வீதங்களை அதிகரித்துவிட்டன என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“மக்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன.
உள்நாட்டு கடன் மீள் கட்டமைப்பு செய்யமாட்டோம் என ஜனாதிபதியாக இருக்கலாம் இராஜாங்க அமைச்சராக இருக்கலாம் அனைவருமே நாடாளுமன்றத்தில் உறுதி கூறினார்கள். ஆனால் இப்போது அதை மீறி இருக்கிறார்கள்.
இதேபோன்று நிலையான வட்டி வீதத்தில் ஒப்பந்தம் செய்து கடன் பெற்றவர்களின் ஒப்பந்தத்தை மீறி அனைத்து வங்கிகளுமே வட்டி வீதங்களை அதிகரித்துவிட்டன.
இதற்கமைய வங்கிகள் கூறியதை போன்று செயற்படவில்லை. எனவே இவர்கள் தற்போது வழங்கும் வாக்குறுதிகளையும் நாம் நம்ப முடியாது.
இந்த நடவடிக்கையால் தனியார்துறை தொழிலாளர்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் பெரும் தோட்ட தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைவார்கள். இதனால் சேமலாபா நிதியின் வீதமும் குறையும்.” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |