கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை - மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த யோசனையானது 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருதப்பாண்டி ராமேஸ்வரன், ஏ.எல்.எம். அதாவுல்லா, வடிவேல் சுரேஷ், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன் ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா சபாகய முதலான கட்சிகள் குறித்த யோசனைக்கு எதிராக வாக்களித்தன.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் எதிராக வாக்களித்திருந்தன