நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் தொடர்பில் வெளியான தகவல்
நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெரும தயாரித்த அறிக்கை மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பெண் ஊழியர்
இந்த அறிக்கை நேற்று முன்தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதுடன், தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் எந்த அதிகாரிக்கும் பாலியல் துன்புறுத்தல் இடம்பெறவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றப் பெண் ஊழியர் ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடந்த ஜனவரி 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், உள்ளக விசாரணை நடத்தப்பட்டதன் பின்னர் முறைப்பாடு செய்த தரப்பினர் திருப்தியடையாத காரணத்தினாலேயே, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.