மெக்சிகோவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சல் - அதிகாரிகள் அதிர்ச்சி
மெக்சிகோவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆபத்தான போதைப்பொருளினால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளர்.
மாத்தறை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட 650 கிராம் மெத்தம்பெட்டமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை கொரியர் மூலம் பார்சல் வந்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர் குறித்த பொதியை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளார்,
அதன்போதே அவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபாய் என சுங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்கால வரலாற்றில் மெக்சிகோவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட மெத்தம்பேட்டமைனின் முதல் பார்சல் இதுவாகும்.
இலங்கையில் ஐ.எஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது