ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு பொதியில் வந்த ஆபத்து
பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் ஒரு கோடியே 64 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் வைத்து சுங்கப் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைப்பற்றியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இந்த பார்சல் வென்னப்புவ ஹலவத்த பகுதியில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதில் 01 கிலோ 08 கிராம் எடையுடைய ஹஷிஸ் இருந்ததாகவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
போதைப்பொருள்
இந்த முகவரியில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது இது போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த போதைப்பொருள் கையிருப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த ஹஷிஸ் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
