SAFF U19 செம்பியன்ஷிப் 2025 போட்டி: இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவு
இந்தியாவில் நடத்தப்பட்ட SAFF U19 செம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கை கால்பந்து அணி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
இரண்டு ஆட்டங்களில் 13 கோல்களால் வீழ்த்தப்பட்டு, ஒரு கோலும் அடிக்காமல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளமையானது பல விமர்சனங்களை சந்தித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
இலங்கை அணி
மே 9 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டியில், இலங்கை முதலில் இந்தியாவை எதிர்கொண்ட நிலையில் 8-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
அதன் பின்னர் நேபாள அணி எதிராக இடம்பெற்ற சவால் மிக்க 5-0 என மேலும் ஒரு கடினமான தோல்வியைச் சந்தித்தது.
இதன் மூலம், இலங்கை அணி ஒரு கோலும் இல்லாமல் மிகப்பெரிய பின்வாங்கலுடன் வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த தோல்வியின் பின்னர் இலங்கை அணி பல விமர்சனங்களை சந்தித்துள்ளது.
SAFF U19 போட்டி மே 9 அன்று ஆரம்பமாகவுள்ளது முன்கூட்டியே தெரிந்திருந்த போதும், இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) கடைசி வீரர் தேர்வுத் தேர்வுகளை வெறும் 40 நாட்கள் முன்னர் அதாவது மார்ச் 27, 28, 29 ஆகிய நாட்களில் மட்டுமே நடத்தியுள்ளது.
இந்தியாவிற்கு பயணம்
இதனால் அணி தயாரிப்புக்கும், ஒத்திகைகளுக்கும், உடற்பயிற்சிக்கும் குறைவான நேரமே காணப்பட்டுள்ளது. மேலும், போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மே 7ஆம் திகதி இலங்கை அணியினர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தோல்விகள் இலங்கை கால்பந்து நிர்வாகத்தின் திட்டமிடல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொது நிர்வாகக் குறைகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.
இதேவேளை, அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் SAFF U19 செம்பியன்ஷிப் 2025 போட்டியின் அரையிறுதி (Semi-Final) சுற்று(மே 16) நடைபெற உள்ளது.
அரையிறுதி போட்டிக்கு இந்தியா,மாலைதீவு,நேபாளம்,பங்களாதேஷ் அணிகள் தகுதிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.