திருகோணமலையில் அகில இலங்கை திறந்த சிலம்பம் போட்டி
அகில இலங்கை திறந்த சிலம்பம் போட்டி இன்று சனிக்கிழமை(31) திருகோணமலை சம்பூரில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை ஆதிக் கலைக்கூடம் இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு அதன் தலைவர் சிலம்பாட்ட ஆசான் ராஜ ஆனந்த் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த அதிகளவான சிலம்பம் வீரர்கள் இந்த சிலம்பப் போட்டியில் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
நினைவுச் சின்னம்
இதன்போது, சிலம்ப ஆசான் ராஜ ஆனந்த் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு சிலம்பம் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிலம்பம் வீரர்களும் பரிசில்களும், சான்றுதழ்களும் வழங்கி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் கலந்து சிறப்பித்தார். அத்தோடு, சம்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி, சட்டத்தரணிகள், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சிலம்பம் வீரர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
