இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள்: மக்களுக்கு எச்சரிக்கை
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பரிசு வழங்கல் மற்றும் சலுகைகள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
நாளொன்றுக்கு ஐந்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இணைய மோசடிகள்
ஒன்லைனில் பணம் சம்பாதிக்கும் வர்த்தகத்தின் மூலம் தனக்கு 80 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் சமீபத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுளுக்கமைய, பெரும்பாலும் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இந்த இணையவழி பண மோசடிகளில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வங்கிக் கணக்கு
வெளிநாடுகளில் உள்ள நபர்கள் மற்றும் இலங்கையில் உள்ளவர்களுடன் இணைந்து இந்த மோசடிகளை மேற்கொள்வதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தங்களது வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் ரகசிய கடவுச்சொற்களை வேறு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |